Bible Language

Isaiah 36 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.
IRVTA   {சனகெரிப் எருசலேமை பயமுறுத்துதல்} PS எசேக்கியா ராஜா அரசாண்ட பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.
ERVTA   எசேக்கியா யூதாவின் அரசனாக இருந்தான். அசீரியாவின் அரசனாக சனகெரிப் இருந்தான். எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டில், யூதாவின் அரணாக சூழ்ந்திருந்த நகரங்களுக்கு எதிராக சனகெரிப் போரிட்டான். சனகெரிப் அந்நகரங்களைத் தோற்கடித்தான்.
RCTA   எசேக்கியாஸ் அரசனின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னனாகிய சென்னாக்கெரிப் என்பவன் யூதாவின் அரண் சூழ்ந்த நகரங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுப் பிடித்தான்.
ECTA   எசேக்கியா அரசனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னன் சனகெரிபு அரண்சூழ்ந்த யூதா நகர்கள் அனைத்திற்கும் எதிராகப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.