Bible Language

Isaiah 40:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
IRVTA   பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
ERVTA   ஒரு குரல் சொன்னது, "பேசு! "எனவே ஒருவன் கேட்டான், "நான் என்ன சொல்லவேண்டும்?" அந்த குரல் சொன்னது, "ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள். அனைத்து ஜனங்களும் புல்லைப் போன்றவர்கள். அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
RCTA   உரக்கக் கூவிச் சொல்" என்றது ஒரு குரலொலி; "உரக்கக் கூவி எதைச் சொல்வேன்?" என்றேன் நான். மனிதர் அனைவரும் புல்லுக்குச் சமம், அவர்களின் மகிமையெல்லாம் வயல் வெளிப்பூவேயாகும்.
ECTA   "உரக்கக் கூறு" என்றது ஒரு குரல்; "எதை நான் உரக்கக் கூற வேண்டும்?" என்றேன். "மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே!