Bible Language

Isaiah 52:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் மக்கள் வீணாகக் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை பரிகாசம் செய்கிறார்கள் * அலறச் செய்கிறார்கள் ; எப்போதும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று யெகோவா சொல்கிறார்.
ERVTA   இப்போது என்ன நடந்தது என்று பார்! இன்னொரு நாடு எனது ஜனங்களை எடுத்துக்கொண்டது. என் ஜனங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நாடு என் ஜனங்களை ஆளுகின்றனர், அவர்களைப் பார்த்து நகைக்கின்றனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என்னையும் என் நாமத்தையும் ஏளனம் செய்கிறார்கள்".
RCTA   இப்பொழுதோ காரணமின்றி நம் மக்கள் கொண்டு போகப்பட்ட பின், நமக்கு இங்கே என்ன வேலை, என்கிறார் ஆண்டவர். அவர்களை ஆளுகிறவர்கள் அநியாயமாய் நடக்கிறார்கள், நாள் முழுதும் இடைவிடாமல் நம் திருப்பெயரைப் பழித்துரைக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
ECTA   இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்க்ள். அவர்களை ஆளுவோர் தற்பெறுமை பேசுகின்றனர்; எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது என்கிறார் ஆண்டவர்.