Bible Language

Joshua 22:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்ளுவார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.
IRVTA   தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
ERVTA   "கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம்.
RCTA   மிக்க ஆற்றல் படைத்த ஆண்டவரான கடவுளுக்குத் தெரியும். தேவாதி தேவனாகிய அவர் அதை அறிந்திருக்கிறது போல் இஸ்ராயேலரும் அறிந்து கொள்ளட்டும். நாங்கள் கலகப் புத்தியினால் அப்பீடத்தைக் கட்டியிருந்தோமாகில் ஆண்டவர் எங்களைப் பாதுகாக்காமல் இவ்வேளையிலேயே தண்டிக்கக் கடவாராக.
ECTA   "உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! அவர் இதை அறிவார். இஸ்ரயேலும் இதை அறிவதாக! இது ஆண்டவருக்கு எதிரான கலகமும் துரோகமுமானால் நீங்கள் எங்களை இன்று தப்பிப் போக விடாதீர்கள்.