Bible Language

Judges 11:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
IRVTA   அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
ERVTA   அப்போது யெப்தா கீலேயாத்தின் தலைவர்களிடம், "நான் கீலேயாத்திற்கு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால் அவ்வாறே செய்வேன். ஆனால் கர்த்தர் எனக்கு வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதியத் தலைவனாக இருப்பேன்" என்றான்.
RCTA   மீண்டும் ஜெப்தே, "அம்மோன் புதல்வரோடு போர் புரிய நீங்கள் என்னை நேர்மையோடு அழைப்பீர்களானால், ஆண்டவர் அவர்களை என்னிடம் கையளிப்பாரானால், நான் உங்கள் தலைவனாய் இருப்பேனா?" என்று கேட்டான்.
ECTA   இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்" என்றார்.