Bible Language

Leviticus 21:23 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
IRVTA   ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.
ERVTA   ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!" என்று கூறினார்.
RCTA   உண்ணலாமென்றாலும், அவன் அங்கவீனமுள்ளவனாதலால், நமது பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடி அவன் திரைக்கு உட்புறத்தில் புகவும் பலிப்பீடத்தண்டை செல்லவும் கூடாது. உங்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் நாமே என்று திருவுளம்பற்றினார்.
ECTA   ஆனால் தொங்குதிரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில் நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர். "