Bible Language

Leviticus 27:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
IRVTA   அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக.
ERVTA   "அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகி விடும்.
RCTA   அதை இனி மாற்றவே கூடாது. அதாவது நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதையும், கெட்டதிற்குப் பதிலாக நல்லதையும் கொடுக்கக் கூடாது. ஒருவன் ஒன்றுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுக்கும்பொழுது மாற்றப்பட்டதும் எதற்குப் பதிலாக மாற்றப்பட்டதோ அதுவும், ஆக இரண்டுமே ஆண்டவருக்குச் சொந்தம்.
ECTA   அது மாற்றத் தகுந்தது அன்று. நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது. ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும்.