Bible Language

Leviticus 27:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
IRVTA   “முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.
ERVTA   "ஜனங்கள் கர்த்தருக்கு மாடுகளையோ, ஆடுகளையோ சிறப்புக் காணிக்கைளாகக் கொடுக்கலாம். அவை முதலில் பிறந்தவையாக இருப்பின் அது ஏற்கெனவே கர்த்தருக்கு உரியது. எனவே அவற்றை ஜனங்கள் சிறப்புக் காணிக்கையாகக் கொடுக்க முடியாது.
RCTA   தலையீற்றானவை ஆண்டவருடையவை. ஆகையால், ஒருவரும் தலையீற்றாகிய உயிர்களை நேர்ந்து ( ஆண்டவருக்கு ) அருச்சித்து ஒதுக்கக் கூடாது. மாடெனினும் ஆடெனினும் அவை ஆண்டவருடையவைகளாம்.
ECTA   தலையீற்று ஆண்டவருடையது. அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்; ஏனெனில் அது, மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே.