Bible Language

Luke 11:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.
IRVTA   எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்;
நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார். PEPS
ERVTA   மற்றவர் செய்கிற குற்றங்களை நாங்கள் மன்னிக்கிறது போலவே, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உள்ளாக்காமல், பிசாசிடமிருந்து காப்பாற்றும் என்றார்.
RCTA   எங்கள் பாவங்களை மன்னித்தருளும், ஏனெனில், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர் அனைவரையும் நாங்களும் மன்னிக்கிறோம். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் " ' என்றார்.
ECTA   எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்") என்று கற்பித்தார்.