Bible Language

Numbers 17:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.
IRVTA   அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரர்களுக்கு விரோதமான அடையாளமாவதற்காக, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாக முறுமுறுப்பதை ஒழியச்செய்வாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள்” என்றார்.
ERVTA   பிறகு கர்த்தர் மோசேயிடம், "ஆரோனின் கைத்தடியை மீண்டும் கூடாரத்திற்குள் எனது உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக வை. எப்போதும் எனக்கு எதிராகத் திருப்புவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இது எனக்கு எதிராக அவர்கள் முறையிடுவதை தடுக்கும். எனவே அவர்களை நான் அழிக்கமாட்டேன்" என்று கூறினார்.
RCTA   அந்நேரத்தில் ஆண்டவர் மோயீசனை நோக்கி: ஆரோனின் கோலை நீ கொண்டு போய், கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பாக அதை உடன்படிக்கைக் கூடாரத்திலே வைக்கவேண்டும். இப்படி நமக்கு முன்பாக அவர்களுடைய முறுமுறுப்பு ஒழியாவிட்டால், அவர்கள் செத்துப்போவார்களென்று அஞ்சக்கடவார்கள் என்றார்.
ECTA   ஆண்டவர் மோசேயிடம், "ஆரோன் கோலைத் திரும்ப எடுத்து உடன்படிக்கைப் பேழை முன் வை; எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோர் சாகாதபடி அவர்கள் முறுமுறுப்புகளை என் முன்னின்று நீ ஒழித்துவிட்டதற்கு ஓர் அடையாளமாக அது வைக்கப்படட்டும்" என்றார்.