Bible Language

Romans 14:23 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
IRVTA   ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே. PE
ERVTA   சரியானது தான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.
RCTA   நல்லதோ கெட்டதோ என்ற தயக்கத்தோடு ஒருவன் உண்பானாகில் அவன் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டான். ஏனெனில், அச்செயல் விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.
ECTA   நல்லதோ கெட்டதோ என்னும் ஐயத்தோடு உண்போர் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் உறுதியான மனநிலையோடு செயல்படவில்லை. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.