Bible Language

Ruth 4:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது போவாஸ்: நீரே நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.
IRVTA   அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான்.
ERVTA   பிறகு போவாஸ், "நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்" என்றான்.
RCTA   போசு அவனை நோக்கி. "நீ அப்பெண்ணிடமிருந்து அந்நிலத்தை வாங்குகிற போது இறந்து போன அவனுடைய மனைவியான மோவாபிய பெண் ரூத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு இறந்த உன் உறவினனுக்கு நீ வாரிசு அளித்து அவன் பெயர் நிலைநிற்கச் செய்ய வேண்டும்" என்றான்.
ECTA   போவாசு அவரிடம், ஆனால் நகோமியிடமிருந்து இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும் என்றார்.