Bible Language

1 John 2:14 (NCV) New Century Version

Versions

TOV   பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
IRVTA   பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். PS
ERVTA   பிள்ளைகளே, பிதாவை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலமானவர்களாக இருப்பதால் உங்களுக்கு எழுதுகிறேன். ஏனெனில் வார்த்தை உங்களில் உள்ளது. தீயவனை வெற்றி கொண்டீர்கள். எனவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
RCTA   அன்புப் பிள்ளைகளே, பரம தந்தையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால் நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். இளைஞரே, நீங்கள் வலிமை மிகுந்தவர்கள்; கடவுளின் வாக்கு உங்களுள் நிலைத்து நிற்கிறது. தீயோனை நீங்கள் வென்றுவிட்டீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன்.
ECTA   சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்; இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.