Bible Language

1 Kings 20:25 (NCV) New Century Version

Versions

TOV   நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
IRVTA   நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
ERVTA   "இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்" என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.
RCTA   உமது படைவீரரில் மடிந்தோரின் எண்ணிக்கைக்குச் சமமான வீரர்களையும், முன்பு நீர் கொண்டிருந்த குதிரைகள், தேர்களின் எண்ணிக்கைக்குச் சமமான குதிரைகளையும் தேர்களையும் சேர்த்து வையும். சமவெளியில் போரிடும் பொழுது நாம் அவர்களை மேற்கௌ;ள நீர் காண்பீர்" என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.
ECTA   நீர் இழந்து விட்ட படைக்குச் சமமான படையை மறுபடியும் திரட்டிக் கொள்ளும். குதிரைக்கு குதிரை, தேருக்குத் தேர், அதே அளவில் திரட்டிக் கொள்ளும். சமவெளியில் அவர்களோடு போரிட்டால், நாமே அவர்களை விட வலிமை மிக்கவராயிருப்போம் என்பது உறுதி" என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.