Bible Language

2 Chronicles 25:16 (NCV) New Century Version

Versions

TOV   தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
IRVTA   தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான். PEPS
ERVTA   அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், அரசன் அவனிடம், "அரசனுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்" என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, "தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை" என்றான்.
RCTA   அமாசியாஸ் தன்னோடு இவ்வாறு பேசின இறவாக்கினரை நோக்கி, "நீ அரசனின் ஆலோசகனோ? உன் வாயை மூடு. இன்றேல் நான் உன்னைக் கொன்று போடுவேன்" என்று மறுமொழி சொன்னான். இதைக்கேட்ட இறைவாக்கினர் அவனைப் பார்த்து, "நீர் எனது ஆலோசனையைக் கேளாது இவ்வாறு நடந்து கொண்டதால், கடவுள் உம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்" என்று சொல்லி வெளியே சென்றார்.
ECTA   இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கையில் அமட்சியா அவரை நோக்கி, "அரசருக்கு ஆலோசகனாக உன்னை நானா நியமித்தேன்? நிறுத்து! நீ ஏன் வீணாக சாக வேண்டும்?" என்றான். இறைவாக்கினரும் சற்று நிறுத்தி, பின் அமட்சியாவை நோக்கி, "எனது ஆலோகனையைக் கேட்காமல் நீ இவ்வாறு செய்ததனால் கடவுள் உன்னை அழிக்க முடிவு செய்திருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்.