Bible Language

2 Chronicles 31:13 (NCV) New Century Version

Versions

TOV   ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
IRVTA   ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் செய்த கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
ERVTA   கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா அரசனும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
RCTA   இவ்விருவருக்கும் கீழ் யேகியேல், அசசியாஸ், நாகாத், அசாயேல், எரிமோத், யோசபாத், எலியேல், எஸ்மாக்கியாஸ், மாகாத், பனாயியாஸ் முதலியோர் அலுவலராகவும் நியமனம் பெற்றனர். இவர்கள் அனைவரும், அரசன் எசெக்கியாசும் ஆலயத்தைக் கண்காணித்து வந்த பெரிய குரு அசாரியாசும் கட்டளையிட்டிருந்தவாறே நியமிக்கப்பட்டனர்.
ECTA   இவ்விருவருக்கும்கீழ் எகியேல், அசரியா, நாகாத்து, அசாவேல், எரிமோத்து, யோசபாத்து, எலியேல், இஸ்மகியா, மகாத்து, பெனாயா ஆகியோர் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர். அரசர் எசேக்கியாவும், ஆண்டவரின் இல்லத் தலைவர் அசரியாவும் கட்டளையிட்டவாறு இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.