Bible Language

2 Kings 10:25 (NCV) New Century Version

Versions

TOV   சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும் போய்,
IRVTA   சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ வீரர்களையும் அவர்களின் தலைவர்களையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் வீரர்களும் அவர்களின் தலைவர்களும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகாலின் கோவிலைச் சேர்ந்த இடமெங்கும் போய்,
ERVTA   பிறகு யெகூ விரைவாகத் தகனபலி கொடுத்தபின், தனது அதிகாரிகளிடமும் தளபதிகளிடமும், "உள்ளே போய் அனைவரையும் கொல்லுங்கள் உயிரோடு எவனையும் வெளியே வரவிடாதீர்கள்" என்றான். எனவே தளபதிகள் தம் மெலிந்த வாள்களால் பாகாலின் பக்தர்களைக் கொன்று போட்டு பிணங்களை வெளியே எறிந்தனர். பின் ஆலயத்தின் உள்ளறைக்குள் சென்றனர்.
RCTA   தகனப்பலி முடிந்ததும் ஏகு தன் படைவீரர்களையும், படைத்தலைவர்களையும் பார்த்து, "நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பியோட விடாமல் எல்லாரையும் வெட்டிக் கொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான். அதன்படியே படைத்தலைவர்களும் படைவீரரும் உள்ளே நுழைந்து, அங்கு இருந்தோரை வாளுக்கு இரையாக்கி அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்தனர். அன்றியும் நகரிலிருந்து பாவால் கோயிலுக்குப் போய்,
ECTA   எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள்" என்றான். அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர்.