Bible Language

2 Kings 11:12 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.
IRVTA   அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் செய்து: ராஜா வாழ்க என்று சொல்லி கரங்களைத் தட்டினார்கள்.
ERVTA   அவன் (யோய்தா) யோவாசை வெளியே அழைத்து வந்தான். அவன் தலையில் மகுடத்தைச் சூடி அரசனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒப்பந்தத்தை கொடுத்தனர். அவனுக்கு அபிஷேகம் செய்து புதிய அரசனாக நியமித்தனர். அவர்கள் கைகளைத் தட்டி, ஓசையெழுப்பி "அரசன் பல்லாண்டு வாழ்க!" என்று வாழ்த்தினார்கள்.
RCTA   யோயியாதா இளவரசனை வெளியே கூட்டிவந்து அவனது தலையின் மேல் முடியை வைத்து, கையில் திருச்சட்ட நூலை அளித்தார்; இவ்வாறு அவனை அரசனாக அபிஷுகம் செய்தனர். பிறகு எல்லாரும், "அரசர் வாழ்க!" என்று சொல்லிக் கைதட்டினர்.
ECTA   பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி "அரசர் நீடுழி வாழ்க! "என்று முழங்கினர்.