Bible Language

2 Kings 13:17 (NCV) New Century Version

Versions

TOV   கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான்.
IRVTA   கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது யெகோவாவுடைய ரட்சிப்பின் அம்பும், சீரியர்களிடமிருந்து விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமாக இருக்கிறது; நீர் ஆப்பெக்கிலே சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்றான்.
ERVTA   எலிசா, "கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்" என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா "எய்துவிடு" என்றான். யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, "இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்" என்றான்.
RCTA   அவனைப் பார்த்து, "கீழ்த்திசையை நோக்கியிருக்கிற சன்னலைத் திறவும்" என்றான். அவன் அதைத் திறந்தவுடன் எலிசேயு, "ஓர் அம்பை எய்யும்" என்றான். அவனும் அவ்வாறே எய்தான். எலிசேயு, "அது ஆண்டவருடைய மீட்பின் அம்பு. சீரியரிடமிருந்து விடுதலைபெறும் மீட்பின் அம்பு. நீர் ஆபேக்கில் சீரியரை முறியடிப்பீர்" என்றார்.
ECTA   எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. "கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற" என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, "ஓர் அம்பை எய்" என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர், "அது ஆண்டவரது மீட்பின் அம்பு; சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு; நீ அபேக்கில் சிரியரை முற்றிலும் அழிப்பாய்" என்றார்.