Bible Language

2 Kings 2:16 (NCV) New Century Version

Versions

TOV   இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
IRVTA   இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்திரவு கொடும்; ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
ERVTA   அவர்கள் எலிசாவிடம், "பாருங்கள், எங்களிடம் தகுதியான 50 பேர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து நாங்கள் சென்று உங்கள் எஜமானைத் தேட எங்களை அனுமதியுங்கள். ஒரு வேளை தேவனுடைய ஆவி அவரைத் தூக்கிச்சென்று எங்காவது மலையிலோ, அல்லது பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்!" என்றார்கள். அதற்கு எலிசா, "இல்லை" எலியாவைத் தேட ஆட்களை அனுப்பாதீர்கள்!" என்றான்.
RCTA   இதோ உம் குருவைத் தேடிச் செல்ல வல்ல ஐம்பது பேர் உம் அடியார்களுக்குள் இருக்கின்றனர். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி மலைமேலாவது பள்ளத்தாக்கிலாவது போட்டிருக்கக் கூடும் என்றனர். அதற்கு அவர், "அவர்களை அனுப்ப வேண்டாம்" என்றார்.
ECTA   மேலும் அவரை நோக்கி, "இதோ! உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்!" என்றனர். அதற்கு அவர், "அவர்களை அனுப்ப வேண்டாம்" என்றார்.