Bible Language

2 Kings 2:4 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
IRVTA   பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
ERVTA   அங்கே எலியா எலிசாவிடம், "நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்" என்றான். ஆனால் எலிசாவோ, "நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்" என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர்.
RCTA   அப்போது எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னை எரிக்கோ வரை அனுப்பியிருக்கிறார். ஆதலின், நீ இங்கேயே இரு " என்றார். அதற்கு அவர் "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். இங்ஙனம் அவர்கள் இருவரும் எரிக்கோ நகரை அடைந்தனர்.
ECTA   எலியா அவரை நோக்கி, "எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். அதற்கு அவர், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.