Bible Language

Ezekiel 39:1 (NCV) New Century Version

Versions

TOV   இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாகவருகிறேன்.
IRVTA   {கோகும் அவனது படையும் மரணமடைதல்} PS இப்போதும் மனிதகுமாரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், மேசேக் தூபால் இனத்தார்களின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.
ERVTA   ‘மனுபுத்திரனே, எனக்காகக் கோகிற்கு விரோதமாகப் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவனிடம் சொல், "கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கியமான தலைவன்! ஆனால், நான் உனக்கு விரோதமானவன்.
RCTA   மனிதா, நீ கோகு என்பவனுக்கு எதிராக இறைவாக்குரைத்து அவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும் முதல்வனுமாகிய கோகு மன்னனே, இதோ நாம் உனக்கு விரோதமாக வருகிறோம்.
ECTA   மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. மெசேக்கு மற்றும் தூபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.