Bible Language

Genesis 47 (NCV) New Century Version

Versions

TOV   யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;
IRVTA   {யாக்கோபின் மகன்கள் கோசேனில் குடியமர்த்தப்படுதல்} PS யோசேப்பு பார்வோனிடம் சென்று: “என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள்” என்று சொல்லி;
ERVTA   யோசேப்பு பார்வோனிடம் சென்று, எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன் பகுதியில் உள்ளனர்" என்றான்.
RCTA   பின் சூசை பாரவோனிடம் போய்: என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடுமாடு முதலியவற்றோடும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இதோ, அவர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.
ECTA   பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், "என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்" என்று அறிவித்தார்.