Bible Language

Joshua 14:15 (NCV) New Century Version

Versions

TOV   முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
IRVTA   முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது. PE
ERVTA   முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.
RCTA   முன்பு எபிரோனுக்குக் கரியாத் அர்பே என்ற பெயர் வழங்கிற்று. ஏனாக்கியருக்குள் மிகப் பெரியவனாய் மதிக்கப்பட்டு வந்த அர்பே அங்கே புதைக்கப்பட்டிருந்தால் அம்மலைக்கு அப்பெயர் வழங்கிற்று. அப்பொழுது நாட்டில் போர்கள் ஓய்ந்து போயின.
ECTA   முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.