Bible Language

Joshua 5:15 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
IRVTA   அப்பொழுது யெகோவாவுடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான். PE
ERVTA   கர்த்தருடைய படையின் சேனாதிபதி, "உனது பாதரட்சையைக் கழற்று. நீ நிற்குமிடம் பரிசுத்தமானது" என்று கூறினார். யோசுவா அவ்வாறே கீழ்ப்படிந்தான்.
RCTA   அதைக் கேட்டு யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவரைப் பார்த்து, "என் ஆண்டவர் தம் ஊழியனுக்குச் சொல்லுகிறது என்ன?" என்று கோட்டார். அதற்கு அவர், "உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு, ஏனெனில் நீ நிற்கிற இடம் மிகவும் புனிதமானது" என்று கூறினார். யோசுவா அக்கட்டளைப்படியே நடந்தார்.
ECTA   ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், "உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில் நீ நிற்கும் இடம் புனிதமானது" என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.