Bible Language

Nehemiah 10:38 (NCV) New Century Version

Versions

TOV   லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
IRVTA   லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம்.
ERVTA   அவர்கள் விளைச்சலைப் பெறும்போது லேவியர்களோடு ஆரோனின் குடும்பத்திலுள்ள ஒரு ஆசாரியர் இருக்கவேண்டும். பிறகு லேவியர்கள் அப்பொருட்களை எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும். பிறகு அவர்கள் ஆலய கருவூலத்தில் அவற்றை போடவேண்டும்.
RCTA   ஆரோன் வழித்தோன்றலான ஒரு குரு, லேவியர்கள் அதை வசூலிக்கும் பொழுது அவர்களோடு செல்வார். தாங்கள் வசூலித்ததில் பத்தில் ஒரு பாகத்தை லேவியர்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அதை ஆலயக் கருவூலத்தில் சேர்த்து வைப்பார்கள்.
ECTA   பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவ+ல அறைகளில் சேர்த்து வைக்கட்டும்.