Bible Language

Romans 3:4 (NCV) New Century Version

Versions

TOV   அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
IRVTA   அப்படியாக்காது:
“நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும்,
உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி,
தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. PEPS
ERVTA   உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார். நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர். உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர் சங்கீதம் 51:4 என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
RCTA   ஒருக்காலுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர், கடவுளோ, உண்மை உள்ளவர் என்பது வெளியாகவேண்டும். ஏனெனில், 'உமது சொல்லில் நீர் குற்றமற்றவராய் விளங்குவீர், நீர் தீர்ப்பிடப்படும்போது வெற்றி பெறுவீர்'. என எழுதியுள்ளதன்றோ?
ECTA   ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில். "உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது" என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!