Bible Language

Zechariah 1 (NCV) New Century Version

Versions

TOV   தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:
IRVTA   {மனம்திரும்ப அழைப்பு} PS தரியு * தரியு, தரியு ஹிஸ்டாபேஸ், பெர்சிய ராஜ்ஜியத்தின் மேல் கிமு. BR 522 லிருந்து 486 கிமு. வரை அரசாண்டான். பெர்சிய மொழியில் அவன் பெயர் தாரா என்று அழைக்கப்பட்டது அரசாண்ட இரண்டாம் வருடம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் மகனாகிய சகரியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தை:
ERVTA   கர்த்தரிடமிருந்து பெரகியாவின் மகன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் மகன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் மகன்) இதுதான் அந்த செய்தி.
RCTA   தாரியுஸ் அரசனின் இரண்டாம் ஆட்சியாண்டில் எட்டாம் மாதத்தில் அத்தோ என்பவரின் மகனான பராக்கியாவின் மகன் சக்கரியாஸ் என்ற இறைவாக்கினருக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
ECTA   தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் எட்டாம் மாதத்தில் இத்தோவின் பேரனும், பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு;