Bible Language

Acts 15:23 (NCV) New Century Version

Versions

TOV   இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
IRVTA   இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்:
ERVTA   அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது: அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து, அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள அன்பான யூதரல்லாத சகோதரருக்கு:
RCTA   இவர்கள் வழியாகப் பின்வரும் கடிதம் எழுதி அனுப்பினர்: "அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் உள்ள புறவினச் சகோதரர்களுக்கு-உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும் மூப்பரும் வாழ்த்துக்கூறி எழுதுவது:
ECTA   பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், "திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம்.