Bible Language

Acts 22:22 (NCV) New Century Version

Versions

TOV   இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
IRVTA   {ரோமக் குடிமகனான பவுல்} PS இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ERVTA   யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக் கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது என்றனர்.
RCTA   இதுவரைக்கும் அவர்கள் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு "ஒழியட்டும் இந்தப் பயல். இவன் உயிரோடு இருக்கவே தகுதியற்றவன்" என்று உரக்கக் கூவினர்.
ECTA   இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், "இவனை அடியோடு ஒழியுங்கள்; இவன் வாழத் தகுதியற்றவன்" என்று கத்தினார்.