Bible Language

Deuteronomy 30:20 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
IRVTA   யெகோவா உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படி, உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு வாழ்க்கையும், நீண்ட ஆயுளுமானவர்” என்றான். PE
ERVTA   நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”
RCTA   உன் உயிரும் நிடிய வாழ்வுமான ஆண்டவர், ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய நாட்டிலே நீ குடியேறவும், நீ உயிரைத் தேர்ந்துகொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர்பால் அன்புகூர்ந்து, அவருடைய திருவுளத்துக்கு அமைந்து, அவரைப் பற்றிக்கொள்வாய் என்றார்.
ECTA   கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.