Bible Language

Exodus 36:6 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
IRVTA   அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
ERVTA   மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: "பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்" என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று.
RCTA   அதை கேட்டு மோயீசன்: இனி ஆடவரோ மகளிரோ பரிசுத்த இடத்துத் திருப்பணிக்கு வேறொரு காணிக்கையும் செலுத்த வெண்டாம் என்று பாளையமெங்கும் கட்டியக்காரன் கூறும்படி கட்டளையிட்டார். மக்கள் கொடைகளைக் கொண்டு வருதல் இவ்விதமாய் நிறுத்தப்பட்டது.
ECTA   அப்போது மோசே, "ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்" என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.