Bible Language

Ezekiel 23:25 (NCV) New Century Version

Versions

TOV   உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.
IRVTA   உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள்.
ERVTA   நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள்.
RCTA   நமது ஆத்திரம் உனக்கு எதிராய் இருக்கும்; அவர்கள் உன்னைக் கொடூரமாய் நடத்தி, உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துப் போடுவார்கள்; உன்னில் மீதியாய் இருப்பவர்களை வாளால் வெட்டுவார்கள்: உன் புதல்வர் புதல்வியரைப் பிடித்துக் கொண்டு, உன்னில் எஞ்சியிருப்பவர்களை அக்கினிக்கு இரையாக்குவார்கள்.
ECTA   நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.