Bible Language

Ezekiel 26:10 (NCV) New Century Version

Versions

TOV   அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும்வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரை வீரரும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன் மதில்கள் அதிரும்.
IRVTA   அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும்.
ERVTA   அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் அரசன் நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும்.
RCTA   அது கிளப்பும் புழுதி உன்னை மூடி மறைக்கும் அளவுக்கு, அவனது குதிரைப்படை பெரிதாய் இருக்கும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவது போல், அவன் உனக்குள் நுழையும் போது, குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் செய்யும் பேரிரைச்சல் உன் மதில்களை அதிரச் செய்யும்.
ECTA   அவனுடைய குதிரைகள் மிகுதியானவை; எனவே அவை கிளப்பும் புழுதி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட நகரில் எளிதாய் நுழைவதுபோல் அவன் உன் நகரில் நுழைகையில், குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் எழுப்பும் பேரொலியால் உன் மதில்கள் அதிரும்.