Bible Language

Genesis 43:34 (NCV) New Century Version

Versions

TOV   அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.
IRVTA   அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த உணவில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லோருடைய பங்குகளைவிட பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் குடித்து, அவனோடு சந்தோஷமாயிருந்தார்கள். PE
ERVTA   வேலைக்காரர்கள் யோசேப்பின் மேஜையிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் பென்யமீனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக உணவு கொடுத்தனர். சகோதரர்கள் யோசேப்போடு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
RCTA   அவர்கள் மிகவும் வியப்புற்று, அவரால் தங்களுக்குப் பரிமாறப்பட்ட பங்குகளை வாங்கிக் கொண்டனர், உண்மையிலேயே, அவர்களுடைய பங்குகளைக் காட்டிலும் பெஞ்சமினுக்குக் கிடைத்த பங்கு ஐந்து மடங்கு அதிகமாய் இருந்தது. அவர்கள் அவரோடு திருப்தியாகப் பானமும் பருகினார்கள்.
ECTA   யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. மற்றவர்களது பங்கைப்போல் ஐந்து மடங்கு மிகுதியாகப் பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது. அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.