Bible Language

Hebrews 4:15 (NCV) New Century Version

Versions

TOV   நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
IRVTA   நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
ERVTA   பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்து கொள்ள முடியும். பூமியில் வாழ்ந்த போது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை.
RCTA   நம்முடைய குறைபாடுகளைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர், நம் தலைமைக் குரு. மாறாக, அவர் நம்மைப்போல் ஒருவராயிருப்பதால், பாவம் தவிர, மற்றெல்லாவற்றிலும் சோதனை, துன்பங்களுக்கு உட்பட்டவரானார்.
ECTA   ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.