Bible Language

Joel 2:27 (NCV) New Century Version

Versions

TOV   நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
IRVTA   நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய யெகோவா, வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
ERVTA   நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வேறு தேவன் இல்லை. எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்."
RCTA   இஸ்ராயேல் நடுவில் நாம் இருக்கிறோம் என்றும், ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள், நம்மையன்றி வேறெவரும் இல்லையென்றும் அப்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; நம் மக்கள் இனி ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.
ECTA   இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.