Bible Language

Leviticus 17:5 (NCV) New Century Version

Versions

TOV   ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
IRVTA   ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
ERVTA   விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியைக் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும்.
RCTA   ஆகையால், இஸ்ராயேல் மக்கள் எந்தப் பலி மிருகத்தையும் வெளியே அடித்திருப்பார்களாயின், அவற்றைக் கூடாரவாயிலின் முன் ஆண்டவருக்கு அளிக்கும் பொருட்டும், சமாதானப் பலிகளாகச் செலுத்தும் படிக்கும் அதைக் குருவிடம் ஒப்புவிக்கக்கடவார்கள்.
ECTA   எனவே, இஸ்ரயேல் மக்கள், வயல் வெளியில் பலியிடுகிற தங்கள் பலிகளைச் சந்திப்புக் கூடாரவாயிலுக்கு ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து, அங்கே அவருக்கு நல்லுறவுப் பலிகளாகச் செலுத்துவார்கள்.