Bible Language

Leviticus 25:10 (NCV) New Century Version

Versions

TOV   ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
IRVTA   “50 வது வருடத்தைப் * 50 வது வருடம் மீட்பின்/ விடுதலையின் வருடம், பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன்.
ERVTA   நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை "யூபிலி" என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள்.
RCTA   ஐம்பதாம் ஆண்டைப் பரிசுத்தமாக்கி, உன் நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் மன்னிப்பென்று கூறுவாய். ஏனென்றால், அது ( மகிழ்ச்சி எனப்படும் ) ஜுபிலி ஆண்டு. அதிலே உங்களில் ஒவ்வொரு மனிதனும் தன் தன் சொத்துக்களைத் திரும்ப அடைவான்; தன் தன் முந்தின குடும்பத்திற்குத் திரும்பிப் போவான்.
ECTA   ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.