Bible Language

Leviticus 8:30 (NCV) New Century Version

Versions

TOV   மோசே அபிஷேகதைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.
IRVTA   மோசே அபிஷேகத்தைலத்திலும், பலிபீடத்தின்மேல் இருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவனுடைய உடைகளின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகளின்மேலும் தெளித்து, ஆரோனையும் அவனுடைய உடைகளையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய மகன்களின் உடைகளையும் பரிசுத்தப்படுத்தினான்.
ERVTA   மோசே கொஞ்சம் அபிஷேக எண்ணெயையும் பலிபீடத்தில் உள்ள இரத்தத்தையும் எடுத்து, அவற்றை ஆரோனின் மேலும் அவனது ஆடைகளின் மேலும் தெளித்தான். பிறகு அவற்றை ஆரோனின் மகன்கள் மீதும் அவர்களின் ஆடைகள் மேலும் தெளித்தான். இவ்வாறு அவன் ஆரோன், அவனது மகன்கள், அவர்களின் ஆடைகள் அனைத்தையும் பரிசுத்தமாக்கினான்.
RCTA   அன்றியும், அபிசேகத் தைலத்திலும் பலிப் பீடத்தின் மேலிருந்த இரத்தத்திலும் சிறிது எடுத்து, ஆரோன் மேலும், அவர் உடைகள் மீதும், அவர் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகள் மீதும் தெளித்தார்.
ECTA   மோசே திருப்பொழிவு எண்ணெயிலும் பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும் ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்; இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும் அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார்.