Bible Language

Malachi 1:4 (NCV) New Century Version

Versions

TOV   ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
IRVTA   ஏதோமியர்கள் ஏசாவின் சந்ததிகள் : நாம் ஒடுக்கப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் யெகோவா: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், என்றைக்கும் யெகோவாவுடைய கோபத்திற்குள்ளான மக்களென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
ERVTA   ஏதோமின் ஜனங்கள், "நாங்கள் அழிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் திரும்பிப்போய் மீண்டும் எங்கள் நகரங்களைக் கட்டுவோம்" என்று சொல்லலாம். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "அவர்கள் மீண்டும் அந்நகரங்களைக் கட்டினால் பிறகு நான் மீண்டும் அவைகளை அழிப்பேன்!" எனவே ஜனங்கள் ஏதோமை ஒரு கேட்டின் நாடு என்கின்றனர். கர்த்தர் என்றென்றும் வெறுக்கும் ஒரு தேசம்.
RCTA   நாம் நிலைகுலைந்தோம்; ஆயினும் பாழானதை மீண்டும் கட்டியெழுப்புவோம்" என்று ஏதோம் கூறுமானால்," அவர்கள் கட்டியெழுப்பட்டும், நாம் இடித்துப்போடுவோம்; 'பொல்லாத நாடு' எனவும்,' ஆண்டவரின் சினத்திற்கு என்றென்றைக்கும் இலக்கான மக்களினம்' எனவும் அவர்கள் பெயர் பெறுவார்கள்" என்று சேனைகளின் ஆண்டவர் மறுமொழி தருகிறார்.
ECTA   எங்கள் நகர்கள் அழிக்கப்பட்டன; ஆனால் அவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம்" என்று ஏதோமியர் கூறுவரேயானால், படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "அவர்கள் கட்டியெழுப்பட்டும்; நான் அவற்றைத் தகர்த்துவிடுவேன். தீய நாட்டினர் என்றும், ஆண்டவரின் கடும்சினத்திற்கு என்றென்றும் இலக்கான இனம் என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.