Bible Language

Micah 6:5 (NCV) New Century Version

Versions

TOV   என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
IRVTA   என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் * இஸ்ரவேலின் கடைசி பாளையும் யோர்தான் நதியின் கிழக்கு பகுதியில் இறங்கினார்கள். யோசுவா 3:1, யோர்தானை கடந்து மேற்கு பகுதியில் முதன்முறையாக கானான் தேசத்தில் கில்கால் என்ற இடத்தில் பாளையம் இறங்கினார்கள் யோசுவா 4:19, இதன் மத்தியில் நடந்த அற்புத காரியம் என்னவென்றால் இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியை கால் நடையாக கடந்தார்கள். தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
ERVTA   என் ஜனங்களே, மோவாபின் அரசனான பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள். பேயோரின் மகனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள். அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள். அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்."
RCTA   எம் மக்களே, மோவாப் அரசன் பாலாக் செய்த திட்டத்தையும், பேயோரின் மகன் பாலாம் அவனுக்குச் சொன்ன பதிலையும், சேத்தீமுக்கும் கல்கலாவுக்கும் இடையில் நடந்ததையும் எண்ணிப்பார்; அப்போது ஆண்டவருடைய மீட்புச் செயல்களை உணர்வாய்."
ECTA   என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்; பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்; அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள்.