Bible Language

Nahum 3:17 (NCV) New Century Version

Versions

TOV   உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியானநாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.
IRVTA   உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.
ERVTA   "உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.
RCTA   உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும், உன் அரசியல் அலுவலர்கள் வெட்டுக்கிளி கூட்டத்திற்கும் நிகர்; குளிர்ந்த நாளில் வேலிகள் மேல் உட்கார்ந்திருக்கின்றன, கதிரவன் எழுந்ததும் பறந்தோடி விடுகின்றன; அதன் பின் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
ECTA   உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்; குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன; கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன; அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது.