Bible Language

Nehemiah 9:24 (NCV) New Century Version

Versions

TOV   அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.
IRVTA   அப்படியே பிள்ளைகள் உள்ளே நுழைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் மக்களாகிய கானானியர்களைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும், தேசத்தின் மக்களையும், தாங்கள் விரும்பியதை செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.
ERVTA   அப்பிள்ளைகளும் நாட்டை எடுத்துக்கொண்டனர். அங்கே வாழ்ந்த கானானியர்களை அவர்கள் தோற்கடித்தனர். நீர் அந்த ஜனங்களை தோற்கடிக்கும்படி செய்தீர்! அந்நாடுகளையும் ஜனங்களையும் அரசர்களையும் அவர்களது விருப்பப்படிச் செய்ய நீர் அனுமதித்தீர்!
RCTA   அவர்களுக்குப் பிறந்த மக்கள் சென்று அந்நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டனர். அவர்கள் முன்னிலையில் அந்நாட்டு மக்களான கானானியரைத் தாழ்த்தினீர்: இவர்களையும் இவர்களின் அரசர்களையும் நாட்டு மக்களையும் அவர்களது கையிலே ஒப்படைத்துத் தம் விருப்பப்படி அவர்களை நடத்த விட்டு விட்டீர்.
ECTA   அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.