Bible Language

Psalms 130:6 (NCV) New Century Version

Versions

TOV   எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
IRVTA   எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
ERVTA   நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
RCTA   என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது: இரவின் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர் நோக்குகின்றது. காவலர் உதயத்தை எதிர் பார்ப்பதற்கு மேலாக,
ECTA   விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.