Bible Language

Psalms 97:7 (NCV) New Century Version

Versions

TOV   சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
IRVTA   சிலைகளை வணங்கி,
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
ERVTA   ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் "தெய்வங்களைப்" பற்றிப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள். அவர்கள் "தெய்வங்கள்" குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
RCTA   சிலைகளை வழிபடுவோர், அவற்றில் பெருமை கொள்வோர் யாவரும் அவற்றில் நாணம் அடைகின்றனர்; அவர் முன்னிலையில் தெய்வங்களெல்லாம் குப்புற விழுகின்றன.
ECTA   உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.