Bible Language

Revelation 14:3 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
IRVTA   அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.
ERVTA   மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர் களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட் டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமி யில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவரா லும் அப்பாடலைக் கற்றுக் கொள்ளமுடிய வில்லை.
RCTA   அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாக அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினார்கள். மண்ணுலகினின்று மீட்கப்பட்ட நூற்று நாற்பத்து நாலாயிரம் பேரைத் தவிர மற்றெவரும் அந்தப் பாடலைக் கற்க இயலவில்லை.
ECTA   அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை.