Versions
TOV பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
IRVTA {மூன்று தேவதூதர்கள்} PS பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து,
ERVTA பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்த வருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய் தியை அத்தூதன் வைத்திருந்தான்.
RCTA பின் இன்னொரு வானதூதர் வானத்தில் உயரப் பறக்கக் கண்டேன். மண்ணில் வாழ்வோர்க்கும், இனம், குலம், மொழி, நாடு ஒவ்வொன்றிற்கும் அறிவிப்பதற்கு நித்திய நற்செய்தியை அவர் தாங்கிச் சென்றார்.
ECTA பின்பு வேறொரு வானதூதர் நடுவானில் பறந்துகொண்டிருக்கக் கண்டேன். அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு, குலம், மொழி, மக்களினம் ஆகிய அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு எக்காலத்துக்கும் உரிய நற்செய்தியை வைத்திருந்தார்.