Bible Language

Romans 3:5 (NCV) New Century Version

Versions

TOV   நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
IRVTA   நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா?
ERVTA   நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.)
RCTA   நம்முடைய அநீதி கடவுளுடைய நேர்மையை விளங்கச் செய்யுமாயின், நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தொழுந்து தண்டித்தால், அவர் அநீதர் என்போமோ ? - இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் - ஒருகாலுமில்லை.
ECTA   நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா?-இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன்-