Bible Language

Ruth 2:2 (NCV) New Century Version

Versions

TOV   மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
IRVTA   மோவாபிய பெண்ணாகிய ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமோ, அவர் பின்னே போய் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
ERVTA   ஒருநாள் ரூத் (மோவாபிலிருந்து வந்த பெண்) நகோமியிடம், "நான் வயலுக்குப் போகலாம் என்றும், என்மீது இரக்கம் காட்டக்கூடிய ஒருவரைக் காண முடியும் என்றும், வயலில் சிதறிக் கிடக்கும் தானியங்களைச் சேகரித்துக்கொள்ள அவர் அனுமதிக்கக் கூடும் என்றும் எண்ணுகின்றேன்" என்றாள்.
RCTA   மோவாபிய பெண் ரூத் தன் மாமியை நோக்கி, "நீர் அனுமதி கொடுத்தால் நான் வயல்வெளிக்குப் போய் எந்தக் குடியானவனுடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ, அவன் பிறகே சென்று, அறுவடை செய்கிறவர்களுடைய கைக்குத் தப்பின கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருவேன்" என்றாள். அதற்கு நோயேமி, "என் மகளே, போய் வா" என்றாள்.
ECTA   ரூத்து நகோமியிடம், "நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்டுகொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும் என்றார். அவரும், "போய் வா, மகளே" என்றார்